சிவகார்த்திகேயனை வம்புக்கு இழுத்த வம்பாளர்கள்

ஒரு ‘பீப் சாங்’ இணையத்தில் வந்தாலும் வந்தது, அதை வைத்து பல நல்ல இமேஜ் உள்ளவர்களை எப்படியாவது சாய்த்து விட வேண்டும் என்று ஒரு வம்பு பிடித்த கும்பல் களம் இறங்கி வேலை பார்த்து வருகிறது.

‘பீப் சாங்’கிற்கு எதிராக சிம்பு, அனிருத் மீது பல வழக்குகள் பாய்ந்து வரும் நிலையில், மாணவர் அமைப்புகளும், பெண்கள் அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.

ஆனால், சமூக வலைத்தளங்களில் நேரம் கடத்திக் கொண்டு  யாரையாவது வம்புக்கிழுத்து எதையாவது எழுதிக் கொண்டிருக்கம் சிலர் நேற்று வளர்ந்து வரும் நடிகரான மக்களிடத்தில் தனக்கென ஒரு ‘நல்ல பையன்’ என்ற இமேஜை வைத்திருக்கும் சிவகார்த்தியனையும் ‘பீப் சாங்’ விஷயத்தில் சிக்க வைத்து விட்டார்கள்.

விஷயத்தை சிம்புவின் காதுக்குக் கொண்டு போனவர்கள், அவரை விட்டே ‘அதற்கும் சிவகார்த்திகேயனுக்கும் சம்பந்தமில்லை’ என்று டிவீட் போட வைத்த பிறகு நேற்றைய ‘வம்பு பிடித்த வதந்தி’க்கு முற்றுப் புள்ளி வந்தது.

விவகாரமான வதந்தியயைக் கிளப்பி விட்ட அந்த ‘நல்ல மனிதர்’ யார் என்று சிவகார்த்திகேயன் வட்டாரத்தில் விசாரித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

Read Previous

‘Star Wars : The Force Awakens’ Opening Weekend Is Biggest Ever

Read Next

குத்தாட்டத்திற்கு புது வரவு ‘சாய்ந்தாடு’ மனிஷா கௌர்

Most Popular