நாளை விஷால் வெளியிடும் ‘அச்சமின்றி’ டீசர்

‘என்னமோ நடக்குது’ என்ற வித்தியாசமான படத்தைத் தயாரித்த டிரிபிள் வி ரெகார்ட்ஸ் பட நிறுவனம் சார்பாக வி.வினோத் குமார் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘அச்சமின்றி’.

தயாரிப்பாளர் வி .வினோத்குமார், நாயகன் விஜய்வசந்த், இயக்குனர் ராஜபாண்டி, இசையமைப்பாளர் பிரேம்ஜி ஆகியோர் ‘என்னமோ நடக்குது’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ‘அச்சமின்றி’ படத்தின் மூலம் இணைகிறார்கள்.

நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். மற்றும் ராதாரவி, கருணாஸ், சரண்யா பொன்வண்ணன், பரத்ரெட்டி, நித்தியா, ஜெயகுமார், தலைவாசல் விஜய், ஷண்முக சுந்தரம் மற்றும் குழந்தை நட்சத்திரங்களாக ஹிருதிக், நிகிலா ஸ்ரீ ஆகியோரும் நடிக்கிறார்கள். கௌரவமான வேடத்தில் ரோகினி நடிக்கிறார்.

“இது கர்ஷியல் கலந்த, சமூகத்தைப் பிரதிபலிக்கின்ற கதை கொண்ட படம். இன்று குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் பெற்றோர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், பெற்றோர்களுக்கு சமூகத்தின் மீது என்ன அக்கறை இருக்கிறது ? அதே மாதிரி சமூகத்திற்கு மக்கள் மீது என்ன மாதிரியான அக்கறை இருக்கிறது என்பதை பக்கா கமர்ஷியல் படமாக எடுத்திருக்கிறோம்,” என்கிறார் இயக்குனர் பி.ராஜபாண்டி.

இந்த படத்தின் டீசரை பார்த்து வெகுவாக பாராட்டிய நடிகர் விஷால் படத்தின் டீசரை நாளை வெளியிடுகிறார்.

Read Previous

மீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜி.வி.பிரகாஷ் படம்

Read Next

‘24’ படத்தின் முன் பாகம் வருமா ?