அது என்ன முன் பாகம் என்று கேட்கிறீர்களா ?.
‘24’ படத்தில் அண்ணன் சூர்யாவுக்கும், தம்பி சூர்யாவுக்கும் இடையே எதற்காக சண்டை என்பது படம் பார்த்த யாருக்கும் தெரியாது. அது படத்திற்கு கதை எழுதிய இயக்குனர் விக்ரம் குமாருக்கும், நடித்த சூர்யாவுக்கு மட்டும்தான் தெரிந்திருக்கும்.
படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே இரண்டு சூர்யாவும் மோதிக் கொள்கிறார்கள். அவர்கள் ஏன் மோதிக் கொள்கிறார்கள் என்பதற்கான காரணம் கடைசி வரை சொல்லப்படவேயில்லை.
ஒரு படத்தின் தொடர்ச்சியாக அதன் அடுத்த பகுதி வந்தால் அது இரண்டாம் பாகம், ஒரு படத்தின் முன் பகுதியாக அதற்கு முந்தைய பாகம் வந்தால் அதுதான் முன் பாகம், ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் ‘prequel’.
இது பற்றி விக்ரம் குமாரும், சூர்யாவும் ஏற்கெனவே பேசி வைத்துவிட்டதாகவும், எல்லாம் சரியாக வந்தால் 2017ல் இந்தப் படத்தை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.