உலகெங்கும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி Who wants to be a millionaire எனும் விளையாட்டு நிகழ்ச்சி. இது ஹிந்தியில், ” கோன் பானேகா க்ரோர்பதி” யாக அமிதாப் பச்சான் மற்றும் ஷாரூக் கான் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி. இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி நீண்ட இடைவேளைக்கு பிறகு மறுபடியும் மக்கள் பார்வைக்கு மூன்றாவது சீசன் ஆக வரும் மே 30ம் தேதி திங்கள் முதல் புதன் வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த நிகழ்ச்சி அறிவாற்றல் கொண்டு வாழ்வை மாற்றப் போகும் பிரம்மாண்ட நிகழ்ச்சியாகும் .
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது என்று அறிவித்தவுடன் யார் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் என்ற கேள்வி பரவலாக பேசப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் நடிகர் சூரியா அவர்களால் சிறப்பாக தொகுக்கப்பட்டது. பின்னர் இரண்டாவது சீசனில் நடிகர் பிரகாஷ் ராஜ் சிறப்பாக தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மே 30ம் தேதி தொடங்கவுள்ள இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்விந்த் சுவாமி தொகுத்து வழங்குகிறார்.
இந்நிகழ்ச்சி பற்றி விஜய் டி.வி யின் பொது மேலாளர் கே. ஸ்ரீராம் அவர்கள் கூறுகையில், ” வெளிநாட்டு நிகழ்ச்சியின் வடிவம், தமிழில் எடுக்க பட்ட முதல் நிகழ்ச்சி இது. இந்த சீசனில் நடிகர் அர்விந்த் சுவாமி தொகுப்பாளராக இடம்பெறுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது .
ஒரு கோடி ரூபாயை வெல்லும் அறிவும் ஆற்றலும் கொண்ட விஜய் டிவி பார்வையாளர்கள் யார் யார் என்பதை வரும் வாரங்களில் காணலாம் . நேயர்களும் வீட்டில் இருந்தபடியே இந்த நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம் .
வரும் மே 30 முதல் திங்கள் முதல் புதன் வரை இரவு 7 மணிக்கு விஜய் டிவியில் காணத்தவறாதீர்கள் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி .
மேலும் விவரங்களுக்கு www.nvok.in லாக் இன் செய்யுங்கள் .