‘பாகுபலி 2’ படத்தை வெளியிடும் ‘கே புரொடக்ஷன்ஸ்’

உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகமான ‘பாகுபலி 2’ படம் வருகிற ஏப்ரல் 28 ம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பாகுபலி 2’ படத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணா, அனுஷ்கா, தமன்னா உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை கே. புரொடக்ஷன்ஸ் எஸ்.என்.ராஜராஜன் பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் தமிழ்நாட்டில் வெளியிடும் கே.புரொடக்ஷன்ஸ் பட நிறுவனமே தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் படத்தை வெளிநாடுகளில் வெளியிடுகிறது.

அத்துடன் கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத் தயாரிப்பிலும் ஈடுபட உள்ளது. ராணா, சத்யராஜ், ரெஜினா, நாசர், கருணாஸ் நடிக்க சத்யசிவா இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகும் ‘மடை திறந்து’ என்ற பெயரில் தமிழிலும், 1945 என்ற பெயரில் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் மிகப் பிரமாண்டமாக பல கோடி ரூபாய் பொருட்செலவில் படம் தயாராக உள்ளது.

‘பாகுபலி 2, மடைதிறந்து, 1945’ என்று மிகப் பிரம்மாண்டமான படங்களின் மூலம் திரைத்துறைக்கு வந்திருக்கும் கே.புரொடக்ஷன்ஸ் இன்னும் பல பிரம்மாண்டமான படங்களை தயாரிக்க உள்ளது.

“பாகுபலி , பாகுபலி – 2 இரண்டு படங்களையும் மிக பிரமாண்டமாக தயாரித்ததின் மூலம் இந்திய சினிமாவை உலக அளவில் பேசவைத்த ஆர்கா மீடியா வொர்க்ஸ் ஷோபு எர்லகட்டா, பிரசாத் தேவிநேனி , இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆகியோருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார் தயாரிப்பளர் எஸ்.என். ராஜராஜன்.

Read Previous

Jaya Tv Independence Day Special Programmes 2016

Read Next

முடிஞ்சா இவன புடி – விமர்சனம்

Most Popular