அரியர்ஸ் மாணவர்கள் ‘அதிமேதாவிகள்’

அப்சலூட் பிக்சர்ஸ் சார்பில் மால்காம் தயாரிக்கும் படம் ‘அதிமேதாவிகள்’.

ரஞ்சித் மணிகண்டன் இயக்கும் இப்படத்தில் சுரேஷ் ரவி, இஷாரா, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் ரஞ்சித் மணிகண்டன் கூறியதாவது,

“இஞ்சினியரிங் கல்லூரியில் படித்து அரியர்ஸ் வைத்துக் கொண்டு ஊர் சுற்றும் மாணவர்கள் பற்றிய கதை இது. ஹீரோவும், ஹீரோயினும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள்.

இருந்தாலும் இருவருக்கம் கல்லூரியில் அதிகமான பழக்கமில்லை. கல்லூரியை விட்டு வெளியே வரும்போது இருவருக்குமே அரியர்ஸ் இருக்கிறது.

அரியர்ஸ் நண்பர்கள் என்கிற நட்பு இருவருக்குமிடையே வர அவர்கள் எப்படி தங்கள் அரியர்களை ‘க்ளியர்’ செய்கிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை.

‘மோ’ படத்தில் நடிச்ச சுரேஷ் ரவிதான் இப்படத்தின் ஹீரோ. இந்தப் படம்தான் அவரின் முதல் படம். ஆனால், ‘மோ’ முதலில் வெளிவந்துவிட்டது. நானும், சுரேஷ் ரவியும் என்ஜினியரிங் படித்தவர்கள். இரண்டு பேருமே அரியர்ஸோடுதான் வெளியே வந்தோம். எங்கள் வாழ்க்கை என்பதால் அதை சரியாக திரைக்கு கொண்டு வருவது எங்களுக்கு எளிதாக இருந்தது.

சதுரங்க வேட்டை படத்திற்கப் பிறகு இஷாராவுக்குப் பெயர் சொல்லும் படமாக இந்தப் படம். ஹீரோவுக்கு இணையான காட்சிகள் ஹீரோயினுக்கு உண்டு. இவர்களைத் தவிர தம்பி ராமையா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே இந்தப் படம் கண்டிப்பாகப் பிடிக்கும், அவ்வளவு கலகலப்பாகச் சொல்லியிருக்கிறோம்,” என்கிறார் இயக்குனர்.

Read Previous

Arvind Swami completes Sathuranga Vettai 2

Read Next

Akshara Haasan excited about her next