காதல் கதையாக உருவாகும் ‘96’

“ரோமியோ ஜூலியட், கத்தி சண்டை, வீர சிவாஜி” போன்ற படங்களைத் தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தைத் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, த்ரிஷா நடிக்கும் ‘96’ படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்திற்கான மற்ற நட்சத்திரத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரேம் குமார் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

“முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகிறது ‘96’. இந்த படத்திற்காக விஜய் சேதுபதி, திரிஷா இருவரது சிறு வயது கதாபாத்திற்கான நடிகர், நடிககை தேர்வு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு கும்பகோணத்தில் விரைவில் துவங்க உள்ளது,” என்றார்.

Read Previous

சரவணன் இருக்க பயமேன் விமர்சனம்

Read Next

‘குங்ஃபு’ மாஸ்டராக பிரபுதேவா நடிக்கும் ‘எங் மங் சங்’