பல திருப்பங்களுடன் விஜய் டிவி ‘சரவணன் மீனாட்சி’ தொடர்

விஜய் டிவியில் 1500 எபிசோடுகளைக் கடந்தும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் ‘சரவணன் மீனாட்சி’.

இந்தத் தொடரில் வரும் திருப்பங்களும் கதாபாத்திரங்களும் தான் இந்தத் தொடரின் மிகப் பெரிய பலம். அதனால் தான் இன்னும் இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் டாப் இடத்தை பிடித்திருக்கிறது.

தொடரின் நாயகன், நாயகியாக நடிக்கும் ரியோ மற்றும் ரக்ஷிதா இருவருமே சரவணன் மீனாட்சியாக மிக இயல்பாக நடித்து வருவதாக பலரின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறார்கள்.

இத் தொடரின் சமீபத்திய ப்ரோமோக்கள் திகிலாக அமைந்து நேயர்கள் மத்தியில் ஆர்வத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், மேலும் எதிர்பாராத பல திருப்பங்களும் வரும் நாட்களில் வர உள்ளதாம்.

பல அமானுஷ்ய விஷயங்கள் மற்றும் மீனாட்சியின் நடவடிக்கை காரணமாக குடும்பத்தில் உள்ள அனைவரும் மீனாட்சிக்கு தான் பேய் பிடித்திருக்கிறது என்று நம்புகிறார்கள். ஆனால் உண்மையில் மீனாட்சிக்குள் ஏதும் அமானுஷ்ய சக்தி இருக்கிறதா அல்லது வேறு யாருக்குள் இருக்கிறது போன்ற பல கேள்விக்கான பதில் இந்த வார எபிசோடில் ஒளிபரப்பாக உள்ளது.

முற்றிலும் பல மாறுபட்ட திருப்பங்களுடன், விறுவிறுப்பாக செல்லும் சரவணன் மீனாட்சி தொடர் விஜய் டிவியில், திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Read Previous

அபியும் அனுவும் – டீசர்

Read Next

வருடத்திற்கு 243 கோடி சம்பாதிக்கும் ஷாரூக் கான்

Most Popular