‘நீட்’ தேர்வு காரணமாக 1176 மதிப்பெண்கள் பெற்றும் டாக்டருக்குப் படிக்க முடியாத விரக்தியில் சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய ஏழை மாணவி அனிதா பத்து நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அனிதாவின் மரணம் ‘நீட்’டிற்கு எதிரான போராட்டத்தை தமிழகத்தில் மேலும் தீவிரப்படுத்தியது.
திரையலகத்தைச் சேர்ந்த பலரும் அனிதா தற்கொலைக்கு அவர்களது இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்தனர்.
நடிகர் விஜய், அனிதாவின் வீட்டிற்கு நேரில் சென்று அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் வெறும் அறிக்கைகளுடன் நிறுத்திக் கொள்ள, அஜித் அப்படி ஒரு அறிக்கை கூட வெளியிடாமல் இருக்க, விஜய் அனிதாவின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளது ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்.