துப்பறிவாளன் டிரைலர் – யு டியூப் டிரென்டிங்கில் நம்பர் 1

மிஷ்கின் இயக்கத்தில் அரோல் கொரேலி இசையமைப்பில் விஷால், அனு இம்மானுவேல், ஆன்ட்ரியா, பிரசன்னா, சிம்ரன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘துப்பறிவாளன்’.

இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. மிஷ்கினின் வித்தியாசமான படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இந்தப் படத்தின் டீசர் வெளியான போதே ஏற்பட்டது.

இப்போது டிரைலர் வெளியான பிறகு அந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. இந்த வாரம் வேறு எந்தப் பெரிய படங்களும் வெளிவராதததால், ‘துப்பறிவாளன்’ படத்திற்கு தியேட்டர்கள் வட்டாரங்களிலும் ஆர்வம் அதிகமாகியுள்ளது.

‘துப்பறிவாளன்’ டிரைலர்தான் இப்போது யு டியூப் டிரென்டிங்கிலும் முதலிடத்தில் உள்ளது.

Read Previous

பாடல்களைக் கேட்டு நடிக்க சம்மதித்தேன் – கௌதம் கார்த்திக்

Read Next

ஜுலி 2 – கவர்ச்சியில் இறங்கியுள்ள லட்சுமி ராய்