தமிழ்த் திரையுலகில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமி ராய். தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 50 படங்களில் நடித்துள்ளார்.
‘ஜுலி 2’ படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாக உள்ளார். தீபக் ஷிவ்தாசனி இயக்கும் இந்தப் படம் ஒரு த்ரில்லர் படம். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
இந்த டிரைலரில் உள்ள லட்சுமி ராயின் கவர்ச்சிகரமான தோற்றம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு லட்சுமி ராய் கவர்ச்சியாக நடித்துள்ளார்.
நான்கு நாட்களிலேயே டிரைலர் 82 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.
2004ம் ஆண்டில் வெளிவந்த ‘ஜுலி’ படத்தின் இரண்டாம் பாகமான ‘ஜுலி 2’ படம் அக்டோபர் 6ம் தேதி வெளியாக உள்ளது.
ஜுலி 2 – டிரைலர்
https://youtu.be/zOb9j4aghy8