‘தீரன் அதிகாரம் ஒன்று’ படப்பிடிப்பு நிறைவு

‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

‘காஷ்மோரா, காற்று வெளியிடை’ ஆகிய இரண்டு படங்களும் ஏமாற்றிவிட்டதால் கார்த்தி இந்தப் படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார். ‘ஸ்பைடர்’ படத்தின் நாயகி ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.

‘சிறுத்தை’ படத்திற்குப் பிறகு கார்த்தி மீண்டும் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தின் முதல் பார்வை வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது.

தீபாவளி அன்று ‘மெர்சல்’ படத்துடன் இந்தப் படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

ஜுலி 2 – கவர்ச்சியில் இறங்கியுள்ள லட்சுமி ராய்

Read Next

விஜய்யின் ‘தெறி’ படத்தை வாங்கிய சன் டிவி

Most Popular