விஷால் நடிக்கும் ‘சண்டக் கோழி 2’ படப்பிடிப்பு இன்று ஆரம்பம்

விஷால், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் மற்றும் பலர் நடிக்க லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘சண்டக் கோழி’

12 வருடங்கள் கழித்து இப்போது படத்தின் இரண்டாம் பாகம் இன்று ஆரம்பமாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த சில நட்சத்திரங்களுடன் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.

இப்படத்திற்காக சென்னையில் உள்ள பின்னி மில்லில் பல கோடி ரூபாய் செலவில் மதுரை திருவிழா செட் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். அதில் இன்று பூஜையுடன் பாடல் காட்சியை படமாக்குகிறார்கள்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு சக்தி, தயாரிப்பு விஷால் பிலிம் பேக்டரி, தயாரிப்பாளர் விஷால்.

Read Previous

இயற்கை விவசாயத்தின் பெருமையைச் சொல்லும் ‘குத்தூசி’

Read Next

இறுதிக் கட்டப் பணிகளில் ‘இமைக்கா நொடிகள்’