இறுதிக் கட்டப் பணிகளில் ‘இமைக்கா நொடிகள்’

கேமியோ பிலிம்ஸ் ஜெயகுமார் தயாரிப்பில் ‘டிமான்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா, அனுராக் காஷ்யப் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘இமைக்கா நொடிகள்’.

ஒரு பரபரப்பான த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி நநடந்து வருகிறது.

ஹிந்தித் திரைப்பட இயக்குனரான அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்க, தெலுங்குத் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ராஷி கண்ணா, அதர்வா ஜோடியாக தமிழில் அறிமுகமாகிறார்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இப்படத்தின் சிங்கிள் டிராக் விரைவில் வெளியாக உள்ளது. ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.

அடுத்து வெளிவர உள்ள படங்களில் ‘இமைக்கா நொடிகள்’ படத்திற்கும் மிகப் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

Read Previous

விஷால் நடிக்கும் ‘சண்டக் கோழி 2’ படப்பிடிப்பு இன்று ஆரம்பம்

Read Next

தெரு நாய்கள் – டிரைலர்