நாயகனாகவும் மாறிய பிறகும் விஜய் ஆண்டனி இசையமைத்து நடிக்கும் படங்களிலும் பாடல்கள் ஹிட்டாகவே அமைந்து வருகின்றன.
அவர் தற்போது நாயகனாக நடித்து இசையமைத்துள்ள ‘அண்ணாதுரை’ படம் நாளை மறுநாள் நவம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தில் இடம் பெற்ற ‘தங்கமா வைரமா’ என்ற பாடல் இசை வெளியீட்டு அன்று தியேட்டரில் திரையிடப்பட்ட போதே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. பாடல் கேட்கவும் இனிமையாக இருந்தது, அதைப் படமாக்கிய விதமும் அழகாக இருந்தது.
கதாநாயகனின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் பாடலாக அமைந்துள்ள ‘தங்கமா வைரமா’ பாடலை எழுதியிருப்பவர் அருண்பாரதி.
இப்பட இயக்குனர் ஸ்ரீனிவாசனும், கதாநாயகன் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும், பாடலாசிரியர் அருண் பாரதியை ஆரம்பத்திலிருந்தே பாராட்டி வந்தனர்.
‘அண்ணாதுரை’ படத்தை பற்றி பாடலாசிரியர் அருண் பாரதி பேசுகையில் ,
”விஜய் ஆண்டனி சாருக்கு எனது வாழ்நாள் முழுவதும் நன்றிகள் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். என் மீதும் எனது திறமை மீதும் பெரிய நம்பிக்கை வைத்து எனக்கு ‘அண்ணாதுரை’ படத்தின் நான்கு பாடல்களையும் தந்தார்.
இப்படத்திற்காக நாங்கள் முதலில் பதிவு செய்தது ‘தங்கமா வைரமா’ பாடல் தான். கதாநாயகனின் குணாதிசயங்கள் மற்றும் அவரின் கதாபாத்திரத்தைப் பற்றி விவரிக்கும் பாடல் இது. இப்படத்தின் நான்கு பாடல்களுமே, டியூனாகவும் வரிகளாகவும் அருமையாக அமைந்துள்ளது. விஜய் ஆண்டனி சாருடன் பணிபுரிய கிடைத்த இந்த வாய்ப்பை நான் முழுமையாக பயன்படுத்தியுள்ளேன் என நம்புகிறேன். ‘அண்ணாதுரை’ படத்தைத் தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசித்து மகிழ்வார்கள் என நம்புகிறேன்,” என்றார்.