2017 தமிழ் சினிமா – அசத்தல் அறிமுக கதாநாயகிகள்

ஒவ்வொரு ஆண்டும் அறிமுகமாகும் கதாநாயகர்களை விட அறிமுகமாகும் கதாநாயகிகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். இந்த ஆண்டும் அது அப்படியே தொடர்கிறது.

அறிமுகமாகம் அத்தனை கதாநாயகிகளும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுவதில்லை. சிலர் அவர்களது அழகாலும், சிலர் அவர்களது நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்கிறார்கள். அப்படி இந்த ஆண்டில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த கதாநாயகிகள் சில பேர். இவர்களில் அடுத்த ஆண்டுகளிலும் வெற்றிகரமாக முன்னேறிச் செல்பவர்கள் யார் என்பதை அவர்களது அடுத்தடுத்த படங்கள்தான் முடிவு செய்யும்.

‘காதல் கண் கட்டுதே’ – அதுல்யா

kadhal kan kattuthe review

கோயம்புத்தூரில் குறும்படம் எடுத்தவர்கள் அதை அப்படியே ‘காதல் கண் கட்டுதே’ சினிமாவாக எடுத்தார்கள். அப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் அதுல்யா. படத்தின் தலைப்பைப் போலவே அவருடைய அழகான கண்கள்தான் அதுல்யாவுக்கு பிளஸ் பாயின்ட். அடுத்து ‘ஏமாலி’ படத்தில் நடித்து வருகிறார். நன்றாகத் தமிழ் பேசத் தெரிந்த நடிகை என்பது இவருக்கு கூடுதல் பலம்.

‘காற்று வெளியிடை – அதிதி ராவ் ஹைதரி

kaatru veliyidai stills

பாலிவுட்டிலிருந்து அறிமுகமாகும் நடிகைகளின் வரவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. மணிரத்னத்தின் அறிமுகம் என்பதால் அதிதி ராவ் ஹைதரிக்கு ‘காற்று வெளியிடை’ படத்தில் ஒரு வரவேற்பு கிடைத்தது. நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தாலும் படம் வெற்றி பெறாததால் இவர் வரும் ஆண்டுகளில் வாய்ப்புகளைப் பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

‘வன மகன்’ – சாயிஷா சைகல்

vanamagan

இந்த ஆண்டு அறிமுகமான நடிகைகளில் அழகாலும், நடனத்தாலும் வசீகரித்தவர். ‘வன மகன்’ படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் சமீபத்திய அறிமுக நடிகைகளில் சாயிஷா அளவிற்கு நடனம் ஆடத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை எனத் தாராளமாகச் சொல்லலாம். அடுத்து விஜய் சேதுபதி ஜோடியாக ‘ஜுங்கா’ படத்திலும், ஆர்யா ஜோடியாக ‘கஜினிகாந்த்’ படத்திலும், கார்த்தி ஜோடியாக பாண்டிராஜ் இயக்கத்திலும் நடித்து வருகிறார். 2018ல் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வர வாய்ப்புகள் அதிகம்.

‘இவன் தந்திரன்’ – ஷ்ரத்தா ஸ்ரீநாத்

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘காற்று வெளியிடை’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அடுத்து வெளிவந்த ‘இவன் தந்திரன்’ படத்தில் தனி நாயகியாக நடித்தார். ஆனால், ‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் தனி வரவேற்பைப் பெற்றுவிட்டார். சமீபத்தில் வெளிவந்த ‘ரிச்சி’ படத்திலும் நடித்துள்ளார். ஒரு ஆண்டில் அறிமுகமாகி அந்த ஆண்டிலேயே நான்கு படங்களில் நடித்தவர் என்ற பெருமையைப் பெற்றுவிட்டார்.

‘துப்பறிவாளன்’ – அனு இம்மானுவேல்

அழகும், இளமையும் இணைந்த ஒரு நடிகையாக இந்த ஆண்டில் அறிமுகமானவர்களில் அனு இம்மானுவேல் முக்கியமானவர். தெலுங்கில் அதற்குள் மிகவும் பிஸியாகிவிட்டார். தமிழில் இன்னும் அடுத்த வாய்ப்பு வரவில்லை. தொடர்ந்து வாய்ப்புகள் வந்தால் அடுத்த ஆண்டில் முன்னணி ஹீரோயின்களின் போட்டியில் சேர்ந்துவிடுவார்.

‘மேயாத மான்’ – பிரியா பவானி சங்கர்

Meyaadha Maan Movie Photo Gallery

டிவியில் தொடரில் நாயகியாக நடித்தவர் சினிமாவுக்கு வந்து இவ்வளவு வரவேற்பைப் பெற்றது ஆச்சரியம்தான். குடும்பப் பாங்கான தோற்றம் இவருக்கு கூடுதல் பலம். நன்றாகவும் நடிக்கத் தெரிந்தவர் என்பதால் அடுத்த குடும்ப குத்து விளக்கு நாயகிகளில் முன்னணிக்கு வரலாம்.

‘அருவி’ – அதிதி பாலன்

2017ம் ஆண்டில் ஒரு அறிமுக நாயகி இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளாரே என முன்னணி ஹீரோயின்களையும் ஆச்சரியப்படுத்தியவர் அதிதி பாலன். யதார்த்தமான அழகும், நடிப்பும் இவரை ரசிகர்களிடம் கொண்டாட வைத்துவிட்டது. தொடர்ந்து சினிமாவில் நடிக்க நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் முன்னணி நடிகைகளையும் ஓரம் கட்டிவிடுவார்.

இவர்கள் தவிர, ‘ப்ரூஸ் லீ’ படத்தில் கிர்த்தி கர்பந்த, ‘ரங்கூன்’ படத்தில் சனா மக்பூல், ‘காதல் கசக்குதய்யா’ வெண்பா, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ மெஹ்ரீன் ஆகியோரும் அழகான அறிமுகங்களாக இருந்தார்கள். ஆனால், அவர்கள் அறிமுகமான படங்கள் சுமாரான வெற்றியைக் கூட பெற முடியாததால் அதிகம் கவனிக்கப்படவில்லை.

2017 அறிமுகக் கதாநாயகிகளில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற நாயகியாக ‘அருவி’ அதிதி பாலன் முன்னணியில் இருக்கிறார்.

இந்த ஆண்டில் அறிமுகமானவர்களில் அடுத்த ஆண்டில் யார் இன்னும் அதிகமாகப் பிரபலம் ஆகப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Read Previous

காலம் என்பது முக்கியம் – ரஜினிகாந்த் பேச்சு

Read Next

2017 தமிழ் சினிமா – நம்பர் 1 நடிகை யார் ?