‘நாடோடிகள் 2’ பூஜையுடன் ஆரம்பம்

2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த ‘நாடோடிகள்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது .

அப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘நாடோடிகள் 2’ படம் நேற்று பூஜையுடன் ஆரம்பமானது. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரக்கனி இயக்கத்தில், சசிகுமார் நாயகனாக நடிக்க உள்ளார். நாயகிகளாக அஞ்சலி, அதுல்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.

பரணி, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்தமூர்த்தி ஆகியோரும் படத்தில் நடிக்கிறார்கள்.

ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற உள்ளது.

Read Previous

இளையராஜா பற்றிய செய்தி, நடிகை கஸ்தூரி அதிரடி செயல்

Read Next

‘சத்ரு’ மோஷன் போஸ்டரை வெளியிட்ட கௌதம் மேனன்