‘சத்ரு’ மோஷன் போஸ்டரை வெளியிட்ட கௌதம் மேனன்

ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘சத்ரு’.

இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி, பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

‘ராட்டினம்’ படத்தில் நடித்த லகுபரன் இந்தப் படத்தின் வில்லனாக நடிக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் நவீன் நஞ்சுண்டான் படம் பற்றிக் கூறுகையில், “இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம். 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள்தான் இந்தப் படம்,” என்கிறார்.

படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குனர் கெளதம் மேனன் நேற்று வெளியிட்டார்.

‘சத்ரு’ விரைவில் வெளியாக உள்ளது.

Read Previous

‘நாடோடிகள் 2’ பூஜையுடன் ஆரம்பம்

Read Next

நிமிர் விமர்சனம்

Most Popular