தினேஷ், அதிதி மேனன் நடிக்கும் ‘களவாணி மாப்பிள்ளை’

“நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர்” உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபடுகிறது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த அனைத்து படங்களையும் மணிவாசகம் தான் இயக்கினார். அந்த கால கட்டத்தில் வணிக ரீதியான வெற்றிகரமான தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இருந்தவர் மணிவாசகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மறைந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஆரம்பித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் மீண்டும் படத் தயாரிப்பில் களமிறங்குகிறது. அப்படத்திற்கு ‘களவாணி மாப்ளிள்ளை’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

மணிவாசகத்தின் மகனான காந்தி மணிவாசகம் தயாரித்து, இயக்க, தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

என். ஆர். ரகுநந்தன் இசையமைக்கும் இப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்கிறார்.

இப் படத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. படப்பிடிப்பு 15 ம் தேதி பொள்ளாச்சியில் துவங்க உள்ளது.

ஜனரஞ்சகமான காமெடி, காதல் கதையாக ‘களவாணி மாப்ளிள்ளை’ உருவாக உள்ளது.

Read Previous

’பக்கா’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

Read Next

காந்தி மணிவாசகம் இயக்கும் ‘களவாணி மாப்ளிள்ளை’

Most Popular