வரலட்சுமி கதையின் நாயகியாக நடிக்கும் ‘வெல்வெட் நகரம்’

மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் அருண் கார்த்திக் தயாரிருக்கும் படம் ‘வெல்வெட் நகரம்.’

முதல் முறையாக கதையின் நாயகியாக நடிக்கிறார் வரலட்சுமி. மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜெய், பிரகாஷ் ராகவன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

பகத்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ‘அருவி’ படத்தின் படதொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா எடிட்டிங் செய்கிறார். ‘கோலி சோடா 2’ புகழ் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். இப்படத்திற்கு சண்டை பயிற்சி ‘துப்பறிவாளன்’ தினேஷ். திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது,

“கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்திய திரைப்படம் இது. சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் மற்றும் சென்னையில் நடைபெற்ற வெவ்வேறு உண்மை சம்பவங்களைத் தழுவி ஆக்சன் திரில்லராக உருவாக்கப்பட்ட படம் தான் ‘வெல்வெட் நகரம்’.

இதன் திரைக்கதை 48 மணி நேரத்தில் நடைபெறுவது போல் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.

மதுரையில் களப்பணியாற்றும் பத்திரிக்கையாளராக வரலட்சுமி நடித்திருக்கிறார். கொடைக்கானலில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதிக்கான ஆதாரத்தைத் தேடியும், அதன் முழு பின்னணியையும் பற்றி துப்பறிவதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார் வரலட்சுமி. இங்கு அவர் சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்கள்தான் இந்தப் படம்.

படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல், மதுரை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது,” என்றார்.

Read Previous

விஜய் டிவி – புதிய கேம் ஷோ ‘வைஃப் கைல லைப்’

Read Next

விஜய் டிவி – தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்