விஜய் டிவி – புதிய கேம் ஷோ ‘வைஃப் கைல லைப்’

விஜய் டிவியில் முற்றிலும் புதுமையான நிகழ்ச்சியாக ‘வைஃப் கைல லைப்’ என்ற நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது.

நிகழ்ச்சியின் தலைப்பிற்கு ஏற்ப, இந்த நிகழ்ச்சி முற்றிலும் ஜோடிகள் கலந்து கொள்ளும் அட்டகாசமான ஒரு கேம் ஷோ. இந்த நிகழ்ச்சியில் மனைவிக்கு ஒரு ‘டாஸ்க்’ வழங்கப்படும். அது அவர்களின் அறிவாற்றல் அல்லது பொறுமையை சோதிக்கும் வகையில் அமையும். எல்லா வாரமும் இந்த நிகழ்ச்சியில் மூன்று ஜோடிகள் பங்கேற்பார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மனைவிக்கு வழங்கப்படும் ‘டாஸ்க்கை’ அவர் செய்து முடிக்க வேண்டும். அப்படி அவர் செய்து முடிக்கத் தவறினால் அவரின் கணவருக்கு கேளிக்கையாக ஒரு தண்டனை வழங்கப்படும் வழங்கப்படும்.

சமீபத்தில் நடந்த ‘கலக்க போவது யாரு’ சீஸனின் வெற்றியாளர் அசார், ‘சரவணன் மீனாட்சி’ ரியோ இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள்.

நட்சத்திர ஜோடிகள் மட்டுமல்லாமல் மற்ற ஜோடிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

இந்த நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 15 முதல் ஞாயிறு தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
.

Read Previous

மெர்க்குரி – டிரைலர்

Read Next

வரலட்சுமி கதையின் நாயகியாக நடிக்கும் ‘வெல்வெட் நகரம்’

Most Popular