16 பெண்களைக் காப்பாற்றிவிட்டார் ஆர்யா, விஷால் மகிழ்ச்சி

நடிகர் ஆர்யாவின் திருமணத்திற்காக மணப் பெண் தேடும் நிகழ்ச்சியாக கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 16 பெண்களில் இருந்து ஒருவரை ஆர்யா தேர்ந்தெடுத்து மணப்பார் என்று அறிவிக்கப்பட்டு அந்த நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியின் கடைசி நாளில் தான் மணக்கப் போகும் பெண் யார் என்பதை ஆர்யா அறிவிப்பார் என்றார்கள்.

ஆனால், ஆர்யா ஒரு பெண்ணை மட்டும் தேர்ந்தெடுத்து மற்றவர்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை எனக் கூறி நிகழ்ச்சியை முடித்து வைத்தார். இப்படிப்பட்ட ஒரு முடிவு நிகழ்ச்சி பற்றிய சர்ச்சையை எழுப்பியது.

இறுதிச் சுற்றில் வந்த மூன்று பெண்களும் ஆர்யாவின் முடிவால் அதிர்ச்சியடைந்தார்கள். நிகழ்ச்சி பற்றி சமூக வலைத்தளங்களில் கடும் விவாதம் நடந்தது.

ஆர்யாவின் நெருங்கிய நண்பரான விஷால் நேற்று நடைபெற்ற ‘மிஸ்டர் சந்திரமௌலி’ இசை வெளியிட்டு நிகழ்ச்சியில் அவருடைய கருத்தைத் தெரிவித்துள்ளார்.

“நான் ஆரம்பத்திலேயே சொன்னேன். அவன் கல்யாணம் பண்ணிக்க மாட்டான். அவன் ப்ரீயா பண்ணத, அந்த சேனல் காசு கொடுத்து பண்ண வச்சிட்டாங்க. யாரைக் கல்யாணம் பண்றேன்னு சொல்றதுக்கு எனக்கு டைம் வேணும்னு அவன் சொல்லி அந்த 16 பெண்களோட வாழ்க்கையைக் காப்பாத்தியிருக்கான், அதுக்காக ஆர்யாவைப் பாராட்டுங்க,” என்றார்.

 

Read Previous

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் – விமர்சனம்

Read Next

Mr சந்திரமௌலி – டிரைலர்

Most Popular