ரஜினிகாந்த் பட அறிவிப்பை ‘கலாய்த்த’ விஜய் ரசிகர்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியது.

இன்று ‘காலா’ வெளியான தினத்தில் ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் ஆரம்பமாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புக்காக நேற்றே ரஜினிகாந்த் டார்ஜிலிங் சென்றார்.

இந்தப் படம் பற்றிய அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் டிவிட்டரில் வெளியிட்டது. ஆனால், அந்த டிவிட்டரின் கமெண்ட் பகுதியில் புதிய படத்திற்கான வாழ்த்துகளை விட விஜய் ரசிகர்களின் கோபமும், கலாய்த்தலும்தான் அதிகம் இருந்தது.

விஜய் நடித்து வரும் 62வது படத்தை ரஜினியின் புதிய படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ்தான் தயாரித்து வருகிறது. அதனால், ரஜினி படம் பற்றிய டிவீட்டில் விஜய் ரசிகர்கள் பொங்கி எழுந்து அவர்களுக்கு விஜய் படம் பற்றிய ‘அப்டேட்’தான் வேண்டும் என்று தெறிக்க வைத்துவிட்டார்கள்.

https://twitter.com/sunpictures/status/1004650420826877952

Read Previous

‘காலா’ பார்க்க காத்திருக்க முடியாது – ஆமீர் கான்

Read Next

‘சூப்பர் டீலக்ஸ்’ – டப்பிங் ஆரம்பித்த சமந்தா