‘காலா’ பார்க்க காத்திருக்க முடியாது – ஆமீர் கான்

இந்தியத் திரையுலகின் மிகப் பெரும் வசூல் நாயகன் ஆமீர்கான். மிகச் சிறந்த படங்களில் நடித்து ‘தங்கல்’ படம் மூலம் சீனாவில் கூட 1000 கோடி வசூலை அள்ளியவர் ஆமீர் கான்.

அப்படிப்பட்ட ஒரு நடிகர் தன்னை ரஜினிகாந்த் ரசிகன் என்று வெளிப்படையாகச் சொல்வது எவ்வளவு பெருமை.

‘காலா’ வெளியாகும் இன்றைய தினத்தில் படம் பற்றி ஆமீர்கான் டிவீட் செய்திருப்பது அந்தப் படத்திற்கு மிகப் பெரும் இலவச விளம்பரம்.

“எப்போதும் ரஜினிகாந்த் ரசிகராக இருப்பதால், ‘காலா’ படம் பார்க்க காத்திருக்க முடியாது,” என டிவீட் செய்து படத்தின் டிரைலரையும் பகிர்ந்திருக்கிறார் ஆமீர்கான்.

https://twitter.com/aamir_khan/status/1004577908034174977

Read Previous

காலா – விமர்சனம்

Read Next

ரஜினிகாந்த் பட அறிவிப்பை ‘கலாய்த்த’ விஜய் ரசிகர்கள்