தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து ஹீரோக்களிலும் மிகச் சிறந்த டான்சர் விஜய் மட்டுமே.
அவருக்குப் போட்டியாக படங்களில் நடனமாடும் வேறு ஒரு ஹீரோவைப் பார்க்க முடியாது. இதில் பிரபுதேவா கணக்கில் வர மாட்டார் என்றாலும், பல பாடல்களில் விஜய்யிடம் இருக்கும் சிறப்பை பிரபுதேவாவிடம் கூடப் பார்க்க முடியாது.
விஜய் அளவிற்கு நடனமாடி பேர் வாங்க வேண்டும் என அவருக்குப் பின் வந்த ஹீரோக்கள் சிலர் முயற்சி எடுத்தாலும் அவர்களால் விஜய்யிடம் நெருங்க முடியவில்லை என்பதே உண்மை.
விஜய் நடிக்கும் படங்களில் அவருக்கு இணையாக நடனமாடும் அளவிற்கு ஒரு ஹீரோயின் கூட இதுவரை வரவில்லை. இதுவரை நடித்த ஹீரோயின்களில் பலரும் விஜய்யின் வேகத்திற்கும், அசைவுகளுக்கும் ஈடு கொடுக்க முடியாமல் தோற்றுப் போயிருக்கிறார்கள்.
ஆனால், இன்று ஒரு வீடியோவைப் பார்த்த பின் விஜய்க்கு ஈடு கொடுத்து சரிக்கு சமமாக நடனமாக ஒரு ஹீரோயின் கிடைத்துவிட்டார் என்று தோன்றியது.
அந்த ஹீரோயின் வேறு யாருமல்ல சாயிஷா தான். அறிமுகமான ‘வனமகன்’ படத்திலேயே அவருடைய நடனத்தால் ரசிகர்களைக் கவர்ந்தவர் சாயிஷா.
இன்று சாயிஷா பகிர்ந்துள்ள வீடியோவைப் பார்க்கும் போது, விஜய்யின் அடுத்த படத்தில் சாயிஷா ஜோடி சேர்ந்தால் இருவரும் நடனத்தில் அசத்துவார்கள் என்று நம்பிக்கை வருகிறது.
கீழேயுள்ள வீடியோவைப் பாருங்கள், நாம் சொல்வது உண்மை என்று தெரியும்.
https://twitter.com/sayyeshaa/status/1005319531974332416