மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘கும்கி 2’

பிரபு சாலமன் இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில், விக்ரம் பிரபு – லஷ்மிமேனன் புதுமுகங்களாக அறிமுகமான ‘கும்கி’ படம் 2012 ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி வெளியாகி வசூல் சாதனை படைத்தது.

தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இந்த படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகும் ‘கும்கி 2’ படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவுற்றது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

நிறைய படங்களில் முதல் பாகத்தின் கதை தொடர்ச்சியாகத்தான் இரண்டாம் பாகம் உருவாக்கப் பட்டிருக்கிறது. ஆனால் கும்கி படத்திற்கும், ‘கும்கி 2’ படத்திற்கும் கதையளவில் எந்த சம்பந்தமும் இல்லை. யானை சம்மந்தப் பட்ட கதை என்பதால் இதற்கும் கும்கி ன்ற தலைப்பை தொடவேண்டி இருக்கிறது என்கிறார் பிரபுசாலமன்.

நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். நாயகி இன்னும் முடிவாக வில்லை. மற்றும் வில்லனாக ஹரிஷ் பெராடி, ஆர்.ஜே.பாலாஜி, சூசன், கோலங்கள் திருச்செல்வம், ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன், மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கிறார்கள்.

டைட்டில் கதாபாத்திரமாக உன்னிகிருஷ்ணன் என்ற யானை நடிக்கிறது.

படம் பற்றி இயக்குனர் பிரபுசாலமன் கூறியதாவது..

“கும்கி 2’ பிரம்மாண்டமான ஒரு படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஒரு குட்டி யானைக்கும், ஒரு சிறுவனுக்கும் உருவான நட்பு, அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிற வரை நடக்கும் வாழ்வியல் தான் ‘கும்கி 2’.

குட்டி யானைக்காக இந்தியா, ஸ்ரீலங்கா, பர்மா, தாய்லாந்து உட்பட ஏராளமான இடங்களில் அலைந்து திரிந்தோம். யானை கிடைத்தால் பர்மிஷன் கிடைக்கல, பர்மிஷன் கிடைத்த இடத்தில் இருந்த யானை ஒத்துழைக்கவில்லை. கடைசியாக தாய்லாந்தில் சரியாக அமைந்து இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டோம். ஒரு யதார்த்தமான படமாக இந்த ‘கும்கி 2’ இருக்கும்.

வழக்கமாக என் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இந்த படத்திலும் நிவாஸ் K. பிரசன்னா இசையில் பாடல்கள் சிறப்பாக இருக்கும்,” என்றார் பிரபுசாலமன்.

தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற “சிங்கம் 3, மெர்க்குரி” மற்றும் தயாரிப்பில் இருக்கும் ‘சண்டக்கோழி 2’, ஆகிய படங்களின் தயாரிப்பாளரான பென் இந்தியா லிமிடெட் ஜெயந்திலால் காடா இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இதைத் தொடர்ந்து மிகப் பிரமாண்டமாக கும்கி 2 படத்தை இந்த நிறுவனம் தயாரிக்கிறது.

ஒளிப்பதிவு – சுகுமார்
இசை – நிவாஸ் K.பிரசன்னா
எடிட்டிங் – புவன்
கலை – தென்னரசு
ஸ்டன்ட் – ஸ்டன் சிவா
தயாரிப்பு மேற்பார்வை – பிரபாகரன்
தயாரிப்பு – பென் இந்தியா லிமிடெட் திரு ஜெயந்திலால் காடா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பிரபுசாலமன்.

Read Previous

விஜய்க்கு சரியான போட்டி சாயிஷா மட்டுமே !

Read Next

ஜுன் 14ல் அசத்தலாக வரும் ‘கோலி சோடா 2’