‘வட சென்னை’ செப்டம்பர் மாதம் ரிலீஸ்

இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் இணைந்து வெளிவந்த ‘பொல்லாதவன், ஆடுகளம்’, ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

அதன் பிறகு இந்த கூட்டணி 7 வருடங்களுக்குப் பிறகு இணைந்துள்ள ‘வட சென்னை’ படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ் நேற்று வெளியிட்டுள்ளார். அதோடு, படத்தின் டிரைலரை அடுத்த மாதம் 28ம் தேதி வெளியிட உள்ளார்கள்.

செப்டம்பர் மாதம் சிவகார்த்திகேயன், சமந்தா நடித்துள்ள ‘சீமராஜா’, விஷால், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சண்டக்கோழி 2’ ஆகிய படங்களும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

இப்போது ‘வட  சென்னை’ படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

மூன்று படங்களுமே இந்த வருடத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்கள். இதனால், சினிமா ரசிகர்களுக்கு செப்டம்பர் மாதம் கொண்டாட்டமான மாதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Read Previous

அபுதாபியில் ‘சாஹோ’ படத்தின் அதிரடி படப்பிடிப்பு

Read Next

கோலி சோடா 2 – விமர்சனம்