இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் சிம்பு இருவரும் முதல் முறையாக புதிய படம் ஒன்றில் இணைந்து பணியாற்ற உள்ளார்கள்.
வெங்கட் பிரபு, தற்போது ‘பார்ட்டி’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தை ‘அமைதிப்படை 2, கங்காரு,’ ஆகிய படங்களின் தயாரிப்பாளரும், ‘மிக மிக அவசரம்’ படத்தின் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
இப்படத்தின் நாயகி, இசையமைப்பாளர், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்கிறார் வெங்கட் பிரபு.
அறிவிப்பிலேயே இந்த புதிய கூட்டணி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.