விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தை இயக்கிய மஜித் தற்போது சதா நடிக்கும் ‘டார்ச் லைட்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்திற்காக தணிக்கை சான்றிதழ் வாங்க மிகவும் போராடியதாக அவர் தெரிவித்துள்ளார்.
“டார்ச் லைட்’ ஒரு பீரியட் பிலிம். 90களில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது.
நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட் அடித்து பாலியல் தொழில் செய்யும் பெண்கள் பற்றிய கதைதான் இந்தப் படம்.
படத்தின் கதையைக் கேட்ட நடிகைகள் பலரும் நடிக்கத் தயங்கினார்கள். ஆனால், நடிகை சதா மட்டும் தைரியமாக நடிக்கச் சம்மதித்தார்.
வறுமையைப் பயன்படுத்தி பெண்ணினத்தை இந்தச் சமூகம் எப்படி படுகுழியில் தள்ளி அவர்களின் வாழ்க்கையைப் பாழாக்குகிறது என்பதை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.
இந்தக் கதை சார்ந்து பலர் உண்மைச் சாட்சியங்களாக உள்ளனர். அப்படிப்பட்ட பலரையும் சந்தித்து வீடியோவில் பேசி பதிவு செய்து படமாக்கினேன்.
இங்கு சென்சார் செய்யச் சென்ற போது சென்சார் சான்றிதழ் தர மறுத்தார்கள். இங்கு போராடிப் பார்த்து வேறு வழியில்லாமல் பிறகு நான் மும்பை சென்று ‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளேன்,” என்கிறார் மஜித்.
கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே படமாக்கி உள்ளேன். படம் சிறப்பாக வந்துள்ளது உங்கள் அனைவருக்கு பிடித்த படமாக இருக்கும்,” என்கிறார் இயக்குனர் மஜித்.
இப்ப படத்தில் சதா, ரித்விகா, புதுமுகம் உதயா, தினேஷ் குமார், இயக்குநர் வெங்கடேஷ், சுஜாதா ரங்கநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஜேவி இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.
விரைவில் ‘டார்ச் லைட்’ ரிலீஸ் ஆகிறது.