சர்கார் – கேரளா உரிமை 8 கோடி ?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சர்கார்’.

இப்படத்தின் கேரளா வினியோக உரிமை சுமார் 8 கோடி ரூபாய் அளவிற்கு விற்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் நடித்து கடந்த சில வருடங்களில் வெளிவந்த படங்களில் ‘புலி’ படம் தவிர அனைத்துப் படங்களுமே நல்ல லாபத்தைக் கொடுத்த படங்களாக அமைந்தன.

‘பாகுபலி 2’ படம் இதுவரையில் கேரளாவில் அதிக விலைக்கு விற்கப்பட்ட மற்ற மொழிப் படமாக இருந்து வருகிறது. இப்போது அந்தப் படத்திற்கு அடுத்து ‘சர்கார்’ இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

‘சர்கார்’ படம் நவம்பர் 8ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

Read Previous

நோட்டா – விமர்சனம்

Read Next

‘பேட்ட’ படத்தில் சசிகுமார்