‘பேட்ட’ படத்தில் சசிகுமார்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன் மற்றும் பலர் நடிக்கும் ‘பேட்ட’ படத்தில் சசிகுமார் இணைந்துள்ளார்.

இது பற்றிய அறிவிப்பை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். ஏற்கெனவே, இந்தப் படத்தில் பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இப்போது அவர்களுடன் சசிகுமாரும் இணைந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் ரஜினியுடன் முதல் முறையாக நடிக்கும் நட்சத்திரங்களுடன் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. ஏற்கெனவே, விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ், நவாசுதீன் சித்திக், குரு சோமசுந்தரம் என பலர் ரஜினிகாந்துடன் முதல் முறையாக சேர்ந்து நடிக்கிறார்கள். அவர்களின் வரிசையில் சசிகுமாரும் இடம் பெற்றுள்ளார்.

‘பேட்ட’ படத்தின் இரண்டாவது போஸ்டர் நேற்றுதான் வெளியிடப்பட்டது. அதில் கிடா மீசையுடன், கிராமத்துத் தோற்றத்தில் இளமையான ரஜினிகாந்த் இடம் பெற்றிருப்பது அவரது ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கிறது.

Read Previous

சர்கார் – கேரளா உரிமை 8 கோடி ?

Read Next

வட சென்னை – மாடில நிக்குற மான்குட்டி – பாடல் Promo

Most Popular