சிவகார்த்திகேயன் படத்தில் ‘நாச்சியார்’ நடிகை இவானா

‘இரும்புத்திரை’ படத்திற்குப் பிறகு அதன் இயக்குனர் பி.எஸ்.மித்ரன், சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

அந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக அறிமுகமாகிறார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலா இயக்கிய ‘நாச்சியார்’ படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடித்த இவானா நடிக்க உள்ளார்.

இது பற்றிய அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான 24 எஎம் ஸ்டுடியோஸ் இன்று வெளியிட்டது.

யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.

https://twitter.com/itsme_ivana/status/1099892487525588992

Read Previous

ஒரே தயாரிப்பாளரின் 3 படங்களில் ஜெயம் ரவி

Read Next

டிவிக்கு முன்பே அமேசான் பிரைம்-ல் ‘விஸ்வாசம்’