சினிமாவில் வாரிசு இருக்கலாமா ? கமல்ஹாசனுக்கு கேள்வி

நடிகரும், மக்கள் நீதி மய்யக் கட்சியின் நிறுவனருமான கமல்ஹாசன் அவரது கட்சியின் முதலாம் ஆண்டு விழா நேற்று திருநெல்வேலியில் பொதுக்கூட்டத்துடன் நடைபெற்றது.

அப்போது பேசிய கமல்ஹாசன், “வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வர வேண்டும்,” என்று பேசினார்.

அரசியலில் வாரிசு இருக்கக் கூடாது என்று பேசும் கமல்ஹாசன் அவர் சார்ந்த துறையான சினிமாவிலும் வாரிசு இருக்கக் கூடாது எனப் பேசுவாரா என சமூக வலைத்தளங்களில் பலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், நடிகர், நடிகை என பலரின் வாரிசுகள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதனால், புதியவர்கள் திரைத் துறையில் நுழைவதும் சிரமமாகவே உள்ளது.

கமல்ஹாசனின் குடும்பத்திலேயே அவருடைய அண்ணன் சாருஹாசன் நடிகர், அண்ணன் மகள் சுகாசினி நடிகை, கமல்ஹாசனின் இரு மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் நடிகையாக இருக்கிறார்கள்.

வாரிசு வேண்டாம் என்று பேசினால் எல்லா துறைகளிலும் வேண்டாம் என்றுதானே பேச வேண்டும். அரசியலில் மட்டும் வேண்டாம் சினிமாவில் மட்டும் வேண்டுமா என்று பலர் கேட்கிறார்கள்.

இதற்கு கமல்ஹாசன் என்ன பதில் சொல்லப் போகிறார்.

Read Previous

டிவிக்கு முன்பே அமேசான் பிரைம்-ல் ‘விஸ்வாசம்’

Read Next

சிவகார்த்திகேயன் படத்திற்கு யுவனின் இசைப் பயணம்