ஜி.எஸ். ஆர்ட்ஸ் சார்பில் பூக்கடை G.சேட்டு தயாரிக்க, நல்.செந்தில்குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் ‘’.
மகேந்திரன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மியாஸ்ரீ நடிக்கிறார். இவர்களுடன் R.சுந்தர்ராஜன், மனோஜ் குமார், பசங்க சிவக்குமார், அப்புக் குட்டி, தவசி, பெஞ்சமின், லொள்ளு சபா உதயா, மீரா கிருஷ்ணன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
பல அரசியல் குழப்பங்கள், பொருளாதார சிக்கல்கள், வாழ்வாதாரத்துக்கான போராட்டங்கள் என தொடர்ந்து தமிழ்நாடு சிக்கல்களை சந்தித்து வரும் வேளையில், இதனை பிரதிபலிக்கும் வகையில் இந்தத் திரைப்படம் தயாராகி வருகிறது.
அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு கிராமத்தில் இதுவரை எந்த தலைமுறையும் சந்திக்காத, பார்க்காத பல்வேறு மர்மமான சம்பவங்களும், பிரச்சனைகளும் அடுத்தடுத்து தொடர்ந்து நடக்கின்றது. ஒரு கட்டத்தில் பிரச்சனைகள் தீவிரமடைந்து மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களுக்கு என்ன காரணம் என்பதை கதாநாயகன் கண்டு பிடித்து தனது கிராமத்தையும் மக்களையும் எப்படி காப்பாற்றினார் என்பதை சஸ்பென்ஸ், திரில்லர் கலந்து விறுவிறுப்பான திரைக் கதையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் கூறுகிறார்
கதையின் நாயகன் மகேந்திரன் ஊர் மக்களுக்கு உதவி செய்வதையே முழுநேர வேலையாகக் கொண்டு பணம் சம்பாதிக்கும் இளைஞனாக புதிய தோற்றத்தில் நடித்திருக்கிறார். இப்படம் மகேந்திரனுக்கு திருப்புமுனையாக இருக்கும் என்கிறார் இயக்குனர்.
ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்களை ஜீவன் மயில், மோகன்ராஜ் எழுத, விஜய் டி.வி. புகழ் செந்தில்கணேஷ், ராஜ லெட்சுமி மற்றும் ஆத்தங்குடி இளையராஜா, சித்தின், நமீதா இவர்களுடன் சேர்ந்து தேவாவும் பாடல்களைப் பாடியுள்ளார்.