உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடித்து கடந்த டிசம்பர் மாதம் வெளிவந்த படம் ‘மாரி 2’.
அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘ரௌடி பேபி’ பாடல் யு டியுபில் வெளியான நிமிடத்திலிருந்து பலரையும் கவர்ந்து தொடர்ந்து ஒவ்வொரு நிமிடத்திற்கு பல்லாயிரம் பார்வைகளைப் பெற்று வருகிறது.
தனுஷ் எழுதி, பாடகி தீ-யுடன் பாடிய பாடல் ‘ரௌடி பேபி’.
மிக விரைவாக 1 மில்லியன், 10 மில்லியன், 100 மில்லியன், 200 மில்லியன் பார்வைகளைப் பெற்ற பாடல், இன்று 55வது நாளில் 250 மில்லியன் பார்வைகளைப் பெற்று மேலும் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இந்திய திரைப்படப் பாடல்களில் மிக விரைவாக 250 மில்லியன் பார்வைகளைப் பெற்ற பாடல்களில் இரண்டாவது இடத்தை இந்த ரௌடி பேபி பிடித்துள்ளது. முதல் இடத்தில் ‘சிம்பா’ ஹிந்திப் படப் பாடலான, ‘ஆன்க் மேரே’ பாடல் உள்ளது.
ரௌடி பேபியின் அடுத்த டார்கெட் 300 மில்லியன், அதை சீக்கிரமே பிடித்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்.