50 நாளில் முடிந்த ‘ஆதித்ய வர்மா’ படப்பிடிப்பு

தெலுங்கில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படம் தமிழில் ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது.

கிரிசய்யா இயக்கத்தில் ரதன் இசையமைப்பில், துருவ், பனிதா சாந்து, பிரியா ஆனந்த் மற்றும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

படத்தை ஆரம்பித்த 50 நாட்களில் முடித்துள்ளதாக படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் தெரிவித்துள்ளார்.

பாலா இயக்கத்தில் ‘வர்மா’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட படத்தை ‘அர்ஜுன் ரெட்டி’ படம் போல இல்லை எனத் தெரிவித்து அந்தப் படத்தை அப்படியே கிடப்பில் போட்டடனர்.

பின்னர், ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் இயக்குனராக கிரிசய்யாவை இயக்குனராக நியமித்த ‘வர்மா’ என்ற பெயரை ‘ஆதித்ய வர்மா’ என மாற்றி படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடித்துள்ளனர்.

இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஜுன் மாதத்தில் ‘ஆதித்ய வர்மா’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Read Previous

மிஸ்டர் லோக்கல் – டக்குனு டக்குனு – வீடியோ பாடல்

Read Next

‘தர்பார்’ முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு