‘மகாமுனி’ தந்த மகிழ்ச்சி – மகிமா நம்பியார்

‘சாட்டை’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மகிமா நம்பியார்.

அதன்பின் தமிழில், ‘என்னமோ நடக்குது, மொசக்குட்டி, குற்றம் 23, புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கடந்த வாரம் அவர் நடித்த ‘மகாமுனி’ படம் வெளிவந்தது. அந்தப் படத்தில் வித்தியாசமான கல்லூரி மாணவியாக நடித்து பாராட்டைப் பெற்றார்.

அப்படம் பற்றிய அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

“என் வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்து விட்டது மகாமுனி. எனக்குப் படத்தின் கதையே தெரியாது. மெளனகுரு பட இயக்குநர் சாந்தகுமார் என்றதும் வேறு கேள்வியே கேட்கத் தோன்றாதல்லவா ?. அப்படித்தான் நான் எதுவுகே கேட்கவில்லை. என்னை ஸ்கீரினில் பார்க்கும் போது எனக்கே வியப்பாக இருந்தது. அது இயக்குநர் சாந்தகுமார் சார் செய்த மேஜிக்.

எனக்கு டப்பிங் பேசும்போது ரொம்பப் பயமாக இருந்தது. நான் சாந்தகுமார் சாரிடம் என் வாய்ஸ் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அவர் மிகவும் கான்பிடன்டாக பேசச் சொன்னார். அவரின் நம்பிக்கை நன்றாக வொர்க்கவுட் ஆகியுள்ளது. இதைப்போல நடிக்கும் போதும் சாந்தகுமார் நம்மை உளவியல் ரீதியாக தயார்படுத்துவார். ஸ்பாட்டில் அவர் நடித்தெல்லாம் காட்டமாட்டார். அந்தக் கேரக்டரின் மனநிலையை நம் கண்முன் கொண்டு வருவது போல விவரிப்பார். அவர் சொல்லச் சொல்ல அந்தக் கதாபாத்திரத்திற்குள் நாம் ட்ராவல் ஆகிடுவோம்.

ஆர்யா போல ஒரு அபூர்வ நடிகரை பார்க்கவே முடியாது. அவர் மிகமிக பிரண்ட்லியான மனிதர். படப்பிடிப்பில் அவர் என்னிடம் “அப்படி நடிங்க இப்படி நடிங்க” என்று எதுவும் சொல்ல மாட்டார். ஆனால் எனது நடிப்பும் நல்லா வரணும் என்று மெனக்கெடுவார். உதாரணத்திற்கு அவர் எதிரில் நிற்கையில் எனக்கு மட்டும் கேமரா வைத்து சஜஷன் ஷாட் எடுக்கும்போது அவர் சும்மா நின்றால் போதும். ஆனாலும் அவர் நமது ரியாக்‌ஷன் பெஸ்ட்டாக வர வேண்டும் என்பதற்காக அவரும் நடித்துக் கொண்டிருப்பார். இப்படி சக ஆர்ட்டிஸ்ட் நடிப்பும் நல்லா வரவேண்டும் என்பதற்காக மெனக்கெடும் நடிகர்களை நான் பார்த்ததில்லை.

எங்கள் இயக்குநர் சாந்தகுமார் சார் எடிட்டிங்கில் இருக்கும் போது என்னிடம், “நீ நடித்த கேரக்டர்ல வேற யாரையும் நினைச்சுப் பார்க்க முடியல” என்று சொன்னார். எனக்கு லைப்லாங் மறக்க முடியாத பாராட்டு அது,” என மகிழ்கிறார் மகிமாம.

அடுத்து ‘ஐங்கரன், அசுரகுரு’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறாராம்.

Read Previous

நம்புங்க, 400 கோடியைக் கடந்த ‘சாஹோ’

Read Next

‘பேச்சிலர்’ – ஹர்பஜன் சிங் வெளியிட்ட ‘ஹாட்’ போஸ்டர்