‘பேச்சிலர்’ – ஹர்பஜன் சிங் வெளியிட்ட ‘ஹாட்’ போஸ்டர்

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் மூலம் தனக்கு நல்ல பெயரை வாங்கிய சில நாட்களிலேயே ‘பேச்சிலர்’ என்ற புதிய படத்தின் போஸ்டரின் மூலம் அந்த நற்பெயரை ஜிவி இழந்து விடுவாரோ என்ற சந்தேகம் வந்திருக்கிறது.

கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங், இந்தப் படத்தின் போஸ்டரை நேற்று வெளியிட்டார். அதில் ஒரு பெண்ணின் கால்களுக்கு நடுவில் ஜிவி பிரகாஷ் தலை வைத்திருப்பது போன்ற புகைப்படம் உள்ளது.

கல்யாணம் ஆனா கம்முனு இருக்கனும்…
கமிட் ஆனா உம்முனு இருக்கனும்..
Bachelorனா ஜம்முனு இருக்கலாம்…
#Bachelor First Look வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன் வாழ்த்துக்கள்,

என ஹர்பஜன் பதிவிட்டு போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இப்படம் பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.

படத்தை சதீஷ் செல்வகுமார் இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்க, திவ்யா பாரதி நாயகியாக நடிக்கிறார்.

“கிராமிய மணம் கமழும் காதல் கதையாக உருவாகும் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். இதற்கு முன் நடித்த எந்த படத்திலும் அவருக்கு இப்படி ஒரு வேடம் அமைந்ததில்லை.

இன்னும் சொல்லப் போனால் ஜி.விக்கு பேச்சிலர் திரைப்படம் ஒரு புதிய இமேஜைக் கொடுக்கும் என்று சொல்லலாம்.

கோயமுத்தூரிலிருந்து பெங்களூரு வரும் இளைஞன் ஒருவன், தன் நண்பர்களின் வாழ்க்கை முறைகளால் பெரிதும் கவரப்படுகிறான். இந்த பாதிப்புகள் அவன் வாழ்க்கையை எவ்வாறு தடம் மாற்றுகின்றன என்பதை சுவைபட விவரிக்கும் படம் இது,” என்கிறார் இயக்குனர் சதீஷ் செல்வகுமார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் பெங்களூரிலும், சில பகுதிகள் சென்னை மற்றும் பொள்ளாச்சியிலும் படமாக்கப்பட உள்ளதாம்.

ஒரு போஸ்டரைப் போட்டு பரபரப்புடன் படத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.

Read Previous

‘மகாமுனி’ தந்த மகிழ்ச்சி – மகிமா நம்பியார்

Read Next

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் ஆரம்பம்