சிரஞ்சீவி, விஜய் சேதுபதி, சுதீப், நயன்தாரா, தமன்னா, சிறப்புத் தோற்றத்தில் அமிதாப்பச்சன், அனுஷ்கா மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் ‘சைரா நரசிம்மா ரெட்டி’.
இப்படத்தை தமிழ் மொழியிலும் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை பல வெற்றிப் படங்களைத் தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்தை டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். அக்டோபர் 2ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது. ஹைதராபாத்தில் வரும் ஞாயிறு 22ம் தேதி படத்திற்கான பிரம்மாண்ட விழா ஒன்றை நடத்த உள்ளார்கள். அதில் பவன் கல்யாண், ராஜமௌலி உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
அதன் பின் சென்னையிலும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் கலந்து கொள்ள ரஜினிகாந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.