‘உற்றான்’ தலைப்புக்குப் பல பாராட்டுக்கள்

சாய் சினிமாஸ் தயாரிப்பில், ஓ. ராஜா கஜினி எழுதி, இயக்கியிருக்கும் படம் ‘உற்றான்’.

இப்படத்தில் ரோஷன், ஹிரோஷினி, வெயில் பிரியங்கா ஆகியோருடன் முக்கியமான கதாபாத்திரங்களில் ரவிசங்கர், வேலராமமூர்த்தி, மதுசூதனன், ஜின்னா, ‘கானா’ சுதாகர், மதுமிதா, இயக்குநர் சரவணன் சக்தி, இமான் அண்ணாச்சி, கோதண்டம், சரவணன், சுலக்ஷனா ஆகியோர் நடித்துள்ளனர் .

ரகுநந்தன் இசையில் , மோகன்ராஜ், அருண் பாரதி, கானா சுதாகர் மற்றும் ரோகேஷ் பாடல் எழுதியிருக்கிறார்கள்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலைப்புலி s தாணு, பாக்யராஜ், R.K. செல்வமணி, ரமேஷ் கண்ணா, ஆர்.வி. உதயகுமார், K .ராஜன், ஒளிப்பதிவாளர் சுகுமார், நடிகர் ஆரி, நடிகர் ராஜேஷ், E .ராமதாஸ், சித்ரா லக்ஷ்மணன் , இயக்குனர் பேரரசு, கலைப்புலி சேகரன், நடிகர் ஜெய்வந்த், கவிஞர் பிறை சூடன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழாவில் ஆர்.வி உதயகுமார் பேசுகையில்,

“இந்த இசை வெளியீட்டு விழா என் குடும்பவிழா. என் வாழ்க்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து தான் ஆரம்பித்தது. என் அன்புச் சகோதரரின் பேரன் தான் இப்படத்தின் ஹீரோ ரோஷன். இந்த ஹீரோவுக்கு முதலில் அவரது பெற்றோர் வைத்த பெயர் உதயகுமார். அந்த வகையில் இப்படத்தின் ஹீரோ நான் தான். இப்படத்தின் டைட்டிலே எனக்கு மிகவும் பிடித்தது.

தமிழைக் காப்பாற்றப் போறேன் என்று சொல்பவர்களின் படங்களின் டைட்டில் கூட இவ்வளவு அழகாக இல்லை. உற்றான் என்ற டைட்டிலுக்காகவே இந்த பட டீமைக் கொண்டாட வேண்டும். இந்தப் படத்தின் டிரைலரும் பாடல்களும் அருமை . இந்தப் படத்தில் ரோஷன் ரொம்ப அசால்டா நடிச்சிருக்கார். இந்த இயக்குநர் இப்படத்தை பல கஷ்டங்களையும் துரோகங்களையும் கடந்து எடுத்திருக்கிறார். அந்த வலிகளுக்கு எல்லாம் மருந்தாக இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியடைய வேண்டும்,” என்று வாழ்த்திப் பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய பலரும் ‘உற்றான்’ என்ற தலைப்பை அதிகம் குறிப்பிட்டுப் பாராட்டிப் பேசினார்கள்.

Read Previous

ரசிகர்களை நம்பி வெளியிடுகிறோம் – கயல் சந்திரமௌலி

Read Next

ராதிகா தான் லேடி சூப்பர்ஸ்டார் – சரத்குமார்