ராதிகா தான் லேடி சூப்பர்ஸ்டார் – சரத்குமார்

சுரபி பிலிம்ஸ் சார்பில் S.மோகன் தயாரிக்க, சரண் இயக்கத்தில், சைமன் கே கிங் இசையமைப்பில், ஆரவ், காவ்யா தப்பார், நிகிஷா பட்டேல், நாசர், ராதிகா சரத்குமார், ரோகிணி மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’.

இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நடிகை ராதிகா சரத்குமாருக்கு நடிகவேள் செல்வி என்னும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சரத்குமார், இயக்குநர் சரண், ஆர் கே செல்வமணி, நாசர், தயாரிப்பாளர் AL அழகப்பன், தனஞ்செயன், ரோகிணி ஆகியோருடன் படக்குழு மொத்தமும் மேடையேறி அவருக்கு பட்டம் வழங்கி வாழ்த்தினர்.

நிகழ்ச்சியில் ராதிகா சரத்குமார் பேசியதாவது,

“என்னை விழாவுக்கு அழைத்த போது இந்த அளவு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவே இல்லை. என் அப்பாவின் நினைவும் போற்றப்படுவதில் மகிழ்ச்சி. நான் முதன் முதலில் பாரதிராஜா படத்தில் நடித்த போது என் தந்தை ஆச்சரியப்பட்டார்.

நான் சினிமாவில் எதிலும் ஆர்வம் இல்லாமல் இருந்தவள். முதன் முதலாக நடிக்கும் போது மேக்கப்பைத் தொட்டு என் தொழில் உன்னிடம் இருக்கட்டும் என என்னை ஆசிர்வதித்தார். அவரது ஆசிர்வாதம் தான் என்னை இந்த இடத்தில் சேர்த்திருக்கிறது.

இந்தப் படத்தில் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். இந்தப் படத்தில் என் கேரக்டர் என் அப்பாவின் சாயல் கொண்டது. அது தான் இந்தப் பட்டம் எல்லாம் கொடுப்பதை சரணுக்கு ஞாபகப்படுத்யியிருக்கும் என நினைக்கிறேன். எதுவானலும் எனக்கு இப்பட்டம் அளித்ததற்கு நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்,” என்றார்.

சரத்குமார் பேசுகையில்,

ராதிகாவை கௌரவப்படுத்தியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. 41 வருடம் சினிமாவில் இருக்கிறார், அவர் இன்னும் பல உயரங்களுக்குச் செல்ல வேண்டியவர். என்னை விட அவர் நடிப்பில் மூத்தவர், பிரபல நட்சத்திரம்.

என்னைப் பொறுத்தவரை அவர் தான் லேடி சூப்பர்ஸ்டார். அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்க வேண்டும். பத்மஸ்ரீக்கு தகுதியானவர் அவர்.

இந்தப் படக்குழு அவரை கௌரவித்ததிற்கு நன்றி. இந்தப் படத்தில் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். படத்தை தியேட்டரில் ரசியுங்கள். மார்க்கெட் ராஜா வெற்றி பெற வாழ்த்துக்கள்,” என்றார்.

Read Previous

‘உற்றான்’ தலைப்புக்குப் பல பாராட்டுக்கள்

Read Next

மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் – டிரைலர்