‘ஜீவி’ வெற்றி நாயகனாக நடிக்கும் புதிய படம்

‘ஜீவி’ புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது.

ஜெ.என். சினிமாஸ் சார்பில் பார்த்தசாரதி தயாரிக்கும் இந்த படத்தை குரு ராமானுஜம் இயக்குகிறார். இவர் ‘கழுகு’ படத்தின் இயக்குனர் சத்ய சிவாவிடம் அசோசியேட் இயக்குனராகப் பணிபுரிந்தவர்.

இப்படத்தை சமூக விழிப்புணர்வு மற்றும் கமர்ஷியல், சென்டிமென்ட் கலந்த திரில்லர் படமாக இயக்குகிறார்.

வெற்றி ஜோடியாக தியா மயூரிகா நடிக்கிறார். குணச்சித்திர பாத்திரத்தில் மாரிமுத்து நடிக்க, கே.ஜி.எஃப் படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திர ராஜு வில்லனாக நடிக்கிறார்.

மற்ற நடிகர்-நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் தலைமையில் பூஜையுடன் படப்பிடிப்பும் ஆரம்பமானது.

தயாரிப்பு நிறுவனம் – ஜெ.என். சினிமாஸ்
தயாரிப்பு – பார்த்தசாரதி
இயக்கம் – குரு ராமானுஜம்
வசனம் – சி.முருகேஷ் பாபு
புகைப்படம் – பாஸ்கர்
ஒளிப்பதிவு – எஸ்.ராமலிங்கம்
படத்தொகுப்பு – ராஜா முகமது (பருத்தி வீரன் & சுப்ரமணியபுரம்)
கலை இயக்கம் – எஸ்.பத்மநாபன்
சண்டை பயிற்சி – சுதேஷ்
பிஆர்ஓ – பிரியா
தயாரிப்பு உருவாக்கம் – அபிமன்னன் எம்.ஏ.

Read Previous

‘பாரம்’ படத்தை வெளியிடும் வெற்றிமாறன்

Read Next

17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா விவரங்கள்…