17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, வரும் டிசம்பர் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது.
சென்னையில் உள்ள தேவி, தேவிபாலா, அண்ணா, கேசினோ, ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம், தாகூர் பிலிம் சென்டர் ஆகிய தியேட்டர்களில் விழாவில் கலந்து கொள்ளும் படங்கள் திரையிடப்பட உள்ளன.
இதன் துவக்க விழா கலைவாணர் அரங்கத்தில் டிசம்பர் 12ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. நிறைவு விழா டிசம்பர் 19ம் தேதி மாலை 6.15 மணிக்கு தேவி தியேட்டரிலும் நடைபெற உள்ளது.
தமிழ்ப் படங்களுக்கான பிரிவில் விண்ணப்பிக்கப்பட்ட 19 படங்களில் 12 படங்கள் விழாக்குழுவினரால் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த வருட விழாவில் 55 நாடுகளிலிருந்து 130 திரைப்படங்கள் பங்கேற்கின்றன.
ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த டாக்டர் பாலாஸ்வர்கா, சிங்கப்பூரைச் சேர்ந்த ஷில்பா, மலேசியாவைச் சேர்ந்த பாரதிராஜா நடராஜா, ஹிந்திப் பட இயக்குனர் சேத்தன் சிங், கன்னட இயக்குனர் ஸ்ரீநிவாஸ், தெலுங்கு இயக்குனர் கே.எல்.பிரசாத், அசாமிய இயக்குனர் ரஜ்னிபாசுமடரி ஆகியோர் விழாவிற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவில் திரையிடப்படும் திரைப்படங்கள்….
இவ்விழாவின் முதல் படம் : ‘பால்மே தி’ஓர்’ கான்ஸ் திரைப்பட விழாவின் வெற்றி திரைப்படம் மற்றும் ‘தி பாராசைட்’ – கொரிய திரைப்படம்
இவ்விழாவின் நிறைவு படம் : கண்டர்மான் – ஜேர்மனி
பிற விருது பெற்ற திரைபடங்கள்:
வெற்றிப்படங்கள் : கான்ஸ் திரைப்பட விழா
போர்ட்ரைட் ஆப் ஏ லேடி ஆன் பயர் – ஃபிரான்ஸ்
பீன் போல் – ரஷ்யா
வெற்றிப்படங்கள்: பெர்லின் சர்வதேச திரைப்பட விழா
பிரன்ஹாஸ் – இத்தாலி
ஸோ லாங், மை சன் – சீனா
சிஸ்டம் கிராஷர் – ஜெர்மனி
போயன்சி – ஆஸ்திரேலியா
தி லெஜன்ட் ஆப் ரீட்டா – ஜெர்மனி
டியர் எம்மா, ஸ்வீட் பூபே – ஹங்கேரி
வெற்றிப்படங்கள்: ஈரான் எப்ஏஜேஆர் திரைப்பட விழா
ஜஸ்ட் 6.2 – ஈரான்
தி வார்டன் – ஈரான்
ஐரினா – பல்கேரியா
வெற்றிப்படங்கள்: வெனிஸ் திரைப்பட விழா
ஏ சன் – துனிசியா
தி மேன் ஹூ சர்ப்ரைஸ்ட் எவ்ரிஒன் – எஸ்டோனியா
ஸோல் – போலந்து
வெற்றிப்படங்கள்: டொரோண்டோ சர்வதேச திரைப்பட விழா
ஸோல் – போலந்து
வெற்றிப்படங்கள்: கார்லோவி வேரி சர்வதேச திரைப்பட விழா, செக் குடியரசு
பாத்ஸ் இன் தி நைட் – ஜெர்மனி
கான்ஸ் திரைப்பட விழா – நாமினிகள்:
நீனா வூ – தைவான் – சம்மர் ஒப் சாங்ஷா (சீனா), சிக், சிக், சிக் (பிரேசில்),கோல்டி (அமெரிக்கா), தலேமஸ் (துனிசியா), சாங் விதௌட் ஏ நேம் (பெரு), தி அன்னோன் செயின்ட் (கத்தார், மொராக்கோ), சிபில் (பெல்ஜியம்), ஹோம்வர்ட் (உக்ரைன்), ஓ மெர்சி! (பிரான்ஸ்)
பெர்லின் சர்வதேச திரைப்பட விழா – நாமினிகள்:
தி கிரவுண்ட் பிநீத் மை ஃபீட் (ஜெர்மனி), ஹோலி பீஸ்ட்ஸ் (டொமினிக்க குடியரசு), தி டே ஆஃப்டர் ஐ ஏம் கான் (இஸ்ரேல்), ஈஸி லவ் (ஜெர்மனி), டிவைன் லவ் (உருகுவே)
வெனிஸ் திரைப்பட விழா – நாமினிகள்:
ஜஸ்ட் 6.5 (ஈரான்), ஆடம் அண்ட் ஈவ்லின் (ஜெர்மனி), ஸ்ட்ரிப்ட் (இஸ்ரேல்)
பூஸான் சர்வதேச திரைப்பட விழா – நாமினிகள்:
தி மேன் ஹூ சர்ப்ரைஸ்ட் எவ்ரிஒன் – எஸ்டோனியா
தேசிய விருதுகளை வென்ற இந்தியன் பனோரமாவின் திரைப்படங்கள்:
அமோரி – இயக்கம்: திரு. தினேஷ் பி போன்ஸ்லே (கொங்கனி)
ஹெல்லாரோ – இயக்கம்: அபிஷேக் ஷா (குஜராத்தி)
சமகால ஜெர்மானிய திரைப்படங்கள்: 6 படங்கள்
பெர்லின் சுவர் வீழ்ந்து 30 ஆண்டுகள்: 5 படங்கள்
சிறப்பு கவனம் பெறும் நாடுகள்:
ஹங்கேரி – 4 படங்கள்
தாய்லாந்து – 2 படங்கள்
தைவான் – 2 படங்கள்
ஆஸ்திரேலிய பார்வை: 2 படங்கள்
சமகால திரைப்படங்கள்:
ஈரான் – 5 படங்கள்
இந்தியா – 13 படங்கள்
போட்டி திரைப்படங்கள் – தமிழ்: 12 படங்கள்
அடுத்த சாட்டை,
அசுரன்,
பக்ரித்,
ஹவுஸ் ஓனர்,
ஜீவி,
கனா,
மெய்,
ஒத்த செருப்பு சைஸ் 7,
பிழை,
சீதக்காதி,
சில்லு கருப்பட்டி,
தோழர் வெங்கடேசன்
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் முதன் முறையாக:
1.அசர்பெஜான் நாட்டின் திரைப்படம் – தி பிரா
2.நியூசிலாந்து நாட்டின் திரைப்படம் – தி ஸ்ட்ரே – 8 வெற்றிகள், 15 நாமினேஷன்ஸ்
3.அல்பேனிய நாட்டின் திரைப்படம் – ஹோலி ப்ளூம், 12 வெற்றிகள், 3 நாமினேஷன்ஸ்
4.கத்தார் / மொராக்கோ நாட்டின் திரைப்படம் – தி அன்னோன் செயின்ட் – கான்ஸ் திரைப்படவிழா நாமினி
5.சூடான் நாட்டின் திரைப்படம் – ஹார்ட்ஸ் அண்ட் போனஸ்
6.இந்தியாவின் தேசிய விருது பெற்ற அமோரி – கொங்கனி
7.இந்தியாவின் தேசிய விருது பெற்ற ஹெல்லாரோ – குஜராத்தி
8.இந்திய நாட்டின் திரைப்படம் – JWLWI – தி சீட் – போடோ / அசாமி
9.இந்திய நாட்டின் திரைப்படம் – IEWDUH – கரோ / காசி
10.இந்திய நாட்டின் திரைப்படம் – நேதாஜி – இருளர்களின் மொழியில்
தனது 90 வது வயதிலும், திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட்டை விட சில மாதங்களே வயதில் பெரியவர் என்றாலும், உலகிலேயே இன்றும் நடித்து வரும் அதிக வயதுடைய ஒரே கலைஞன் சாருஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
17வது சென்னை சர்வதேச திரைப்படவிழாவின் துவக்க நாளான டிசம்பர் 12 ஆம் தேதி, அவரது கலையுலகப் பங்களிப்பைப் பாராட்டி, கௌரவிக்கும் விதமாக அவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்படுகிறது. பல்வேறு பிராந்திய மொழிகளில் சுமார் 50 படங்களில் நடித்திருக்கும் சாருஹாசன், 1986ல் வெளியான ‘தபாரனா கதே’ திரைப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் விழாக் குழுவினர் இவற்றைத் தெரிவித்தார்கள்.