விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கௌர் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணையும், பூரி கனெக்ட்ஸ், ஜேபி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப் படம், தனது இறுதி நாள் படப்பிடிப்பை எட்டிய நிலையில், பூரி  ஜெகன்னாத் – விஜய் சேதுபதி – சார்மி கௌர் ஆகியோர் பகிர்ந்த,  மகிழ்ச்சியும், உணர்ச்சியும் நிறைந்த வீடியோவை வெளியிட்டு, இந்த சிறப்பு தருணத்தை படக்குழு கொண்டாடியுள்ளனர்.

வீடியோவில் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் உடனும் படக்குழுவுடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் எந்த அளவு  நினைவில் நிற்கக்கூடியது என்பதையும், அவர்களை நிறைய மிஸ் செய்யப் போவதாகவும் கூறினார். பூரி மற்றும் சார்மி ஆகியோரும் இதே போல தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர். 

இப்படத்தில் சம்யுக்தா நாயகியாக நடிக்க, தபு மற்றும் துனியா விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, VTV கணேஷ் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

‘அர்ஜுன் ரெட்டி’, ‘அனிமல்’ போன்ற படங்களில் அதிரடியான  இசையமைப்பால் கவனம் பெற்ற தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், படக்குழு புரமோஷன் பணிகளை விரைவில்  தொடங்கவுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், டைட்டில் அறிமுகம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. 

இப் படம் தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான்-இந்தியா பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

Read Previous

கோவா திரைப்பட விழாவில் ‘லாக்டவுன்’

Read Next

சூப்பர் ஹீரோ, நிஞ்சா படங்கள் ஆரம்பம்