ரியோ நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் என்ன என்பது தெரியவந்துள்ளது.
’ஜோ’ படத்திற்கு பிறகு புதிய படமொன்றை ஒரே கட்டமாக முடித்துவிட்டு திரும்பியுள்ளார் ரியோ ராஜ். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்தினை சுவநீத் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார்.
இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக 40 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது. இதில் ரியோவிற்கு நாயகியாக ‘சூழல்’ தொடரில் நடித்த கோபிகா ரமேஷ் நடித்துள்ளார். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
இதற்கான வீடியோ ஒன்றினை தயாரித்து வருகிறார்கள். அதன் மூலம் படக்குழுவினர், படத்தின் பெயர், ஃபர்ஸ்ட் லுக் என அனைத்துமே வெளியாக இருக்கிறது. மேலும், செப்டம்பருக்குள் படத்தின் இறுதிகட்டப் பணிகளையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
Tags: rio