‘மாசாணி அம்மன்’ போட்டியாக ‘மூக்குத்தி அம்மன் 2’

‘மாசாணி அம்மன்’ படத்துக்குப் போட்டியாக ‘மூக்குத்தி அம்மன் 2’ அறிவிக்கப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மூக்குத்தி அம்மன்’. வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியானது. இதனைத் தொடர்ந்து வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ’சிங்கப்பூர் சலூன்’ படத்திலும் நடித்தார். அதற்குப் பிறகு பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தினை இயக்கி, நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் படத்துக்கு ‘மாசாணி அம்மன்’ எனப் பெயரிட்டுள்ளார். இதில் த்ரிஷா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஆனால், இது இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனிடையே, இந்தப் படத்துக்கு ‘மூக்குத்தி அம்மன்’ தலைப்பைக் கேட்டதற்கு வேல்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டது. இதனால் தான் ‘மாசாணி அம்மன்’ எனப் பெயரிட்டார் ஆர்.ஜே.பாலாஜி.

தற்போது ‘மாசாணி அம்மன்’ படத்துக்குப் போட்டியாக ‘மூக்குத்தி அம்மன் 2’ என்ற படத்தினை அறிவித்துள்ளது வேல்ஸ் நிறுவனம். இதனை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க, நயன்தாரா நடிக்கவுள்ளார். இதன் இயக்குநர் உள்ளிட்டவை இன்னும் முடிவாகவில்லை.

Read Previous

ஜெயம் ரவியை இயக்கும் ‘டாடா’ இயக்குநர்?

Read Next

ரியோவின் அடுத்த பட அப்டேட்

Most Popular