ஜெயம் ரவியை இயக்கும் ‘டாடா’ இயக்குநர்?

ஜெயம் ரவி நடிக்கும் படத்தினை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் இயக்குநர் கணேஷ் பாபு

கணேஷ் பாபு இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பினைப் பெற்ற படம் ‘டாடா’. இந்தப் படத்தின் வெற்றியால் லைகா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தினை இயக்க ஒப்பந்தமானார். ஆனால், அந்தப் படம் தொடங்கப்படவே இல்லை. அதில் நாயகனாக நடிக்க துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதனிடையே, லைகா தயாரிக்கும் படம் தாமதமானால், ஜீவா வைத்து அதே கதையினை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் கணேஷ் பாபு. அதுவும் தாமதமாகிக் கொண்டே வந்தது. இறுதியாக வேறொரு கதையினை எழுதி முடித்துவிட்டார்.

தற்போது அந்த புதிய கதையில் ஜெயம் ரவியை நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் கணேஷ் பாபு. அதன் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், பேச்சுவார்த்தை சுமூகமாக இருப்பதால் விரைவில் தயாரிப்பாளர் முடிவாகி தொடங்கப்படும் என தெரிகிறது.

Read Previous

‘வணங்கான்’ படக்குழுவில் திடீர் மாற்றம்

Read Next

‘மாசாணி அம்மன்’ போட்டியாக ‘மூக்குத்தி அம்மன் 2’