மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி

மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

ரஜினி – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் வெளியான படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதற்குப் பிறகு ரஜினி – கார்த்திக் சுப்புராஜ் பலமுறை சந்தித்தாலும் அடுத்தகட்டத்திற்கு நகரவில்லை.

தற்போது சூர்யா நடித்து வரும் படத்தினை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். இந்தப் படத்திற்குப் பிறகு ரஜினி நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார். இது தொடர்பான இறுதிகட்ட சந்திப்பு, சூர்யா படத்தின் படப்பிடிப்புக்கு கிளம்பும் முன் நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் கார்த்திக் சுப்புராஜ் கூறிய முழுமையான திரைக்கதைக்கு ஒ.கே சொல்லியிருக்கிறார் ரஜினி. மேலும், இதனை திரைக்கதை வடிவ புத்தகமாக கொடுத்துவிடும்படி தெரிவித்துள்ளார். அதனை படித்துவிட்டு பணிகளைத் தொடங்கலாம் எனவும் கூறியிருக்கிறார்.

மீண்டும் ரஜினி – கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தின் தயாரிப்பாளர் யார் உள்ளிட்ட விவரங்கள் எதுவுமே முடிவாகவில்லை. சூர்யா படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்தவுடன் தான் அனைத்துமே தெரியவரும்.

Read Previous

ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகிறது ‘வணங்கான்’

Read Next

கேள்வி கேட்டவர்களுக்கு மகாராஜா படம் பதில் சொல்லியிருக்கிறது – விஜய் சேதுபதி

Most Popular