த.செ.ஞானவேல் இயக்கத்தில் நானி

த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நானி நடிக்கவுள்ளார்.

’ஜெய்பீம்’ படத்தினைத் தொடர்ந்து ‘வேட்டையன்’ படத்தினை இயக்கி வருகிறார் த.செ.ஞானவேல். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ரஜினி, ராணா, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை.

சமீபத்தில் ரஜினி பங்கேற்ற பாடல் காட்சி ஒன்றை சென்னையில் படமாக்கினார்கள். இதனைத் தொடர்ந்து மேலும் சில முக்கிய காட்சிகளை படமாக்கி வருகிறது படக்குழு. ‘வேட்டையன்’ படத்துக்குப் பிறகு நானி நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் த.செ.ஞானவேல்.

இதற்கான பேச்சுவார்த்தை அனைத்தும் முடிவடைந்துவிட்டது. இன்னும் தயாரிப்பாளர் மட்டும் முடிவாகவில்லை. தயாரிப்பாளர் முடிவானவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Read Previous

அண்ணாமலை பயோபிக்கில் விஷால்? – உண்மை நிலவரம் என்ன?

Read Next

கரீனா கபூர் நீக்கம்: நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை