அண்ணாமலை பயோபிக்கில் விஷால்? – உண்மை நிலவரம் என்ன?

அண்ணாமலை வாழ்க்கை வரலாற்றில் விஷால் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

தமிழக பாஜக தலைவராக பணிபுரிந்து வருகிறார் அண்ணாமலை. இவர் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து அதிலிருந்து ஓய்வு பெற்று பாஜகவில் இணைந்து தலைவரானார். தற்போது நாடாளுமன்ற தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இதன் முடிவு ஜூன் 4-ம் தேதி வெளியாகவுள்ளது.

இதனிடையே, அண்ணாமலை பயோப்பிக் விஷால் நடிக்கவிருப்பதாக தகவல் பரவி வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தையினை முன்னணி தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருவதாகவும் தெரிவித்து வருகிறார்கள். அந்த தயாரிப்பு நிறுவனம் எதுவென்றால் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தான்.

ஜூன் 4-ம் தேதி வரவுள்ள தேர்தல் முடிவுகளை முன்வைத்தே அண்ணாமலை பயோபிக் படமாவது தெரியவரும். கோயம்புத்தூர் தொகுதியில் அண்ணாமலை ஜெயித்துவிட்டால், அவருடைய பயோபிக்கை உருவாக்குவதில் உறுதியாக இருக்கிறார் ஞானவேல்ராஜா. எப்படி ஒரு ஐபிஎஸ் அதிகாரி வெற்றிகரமாக பணிபுரிந்து, அங்கிருந்து அரசியலில் குதித்து ஒரு கட்சிக்கு மாநில தலைவராகி நாடாளுமன்ற தேர்தலில் ஜெயித்தார் என்பதை படமாக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்கள்.

இது தொடர்பான பேச்சுவார்த்தை அண்ணாமலை ஜெயித்துவிட்டால் உடனடியாக தொடங்க வேண்டும் என்று தனது நண்பர்களிடம் கூறிவருகிறார்.

Read Previous

முடிவானது ‘லவ் டுடே’ இந்தி ரீமேக்

Read Next

த.செ.ஞானவேல் இயக்கத்தில் நானி

Most Popular